அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து - ஈரான்
அணு ஆயுத உற்பத்தி நிறுத்துவதாக 2015ம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவது தொடர்பாக , அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா இங்கிலாந்து ஆகிய ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜெர்மனியுடன் ஈரான் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டது.
Also Read : ஈரான் - அமெரிக்கா மோதலால் இந்தியா சந்திக்க காத்திருக்கும் பேராபத்து
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 2018ம் ஆண்டு அறிவித்தார். இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் உருவானது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.
அண்மையில் ஈரான் தளபதி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. எந்த விதமான நிர்ப்பந்தங்களும் தங்களை கட்டுப்படுத்தாது என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
Comments