அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு

0 907

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் இன்று திறக்கப்படுகின்றன.

அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.  ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அளவு புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன.


Watch Polimer News Online at https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments