சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது சர்வதேச பனிச்சிற்பத் திருவிழா
சீனாவில் சர்வதேச பனிச்சிற்பத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. ரஷ்யாவின் சைபீரியாவின் எல்லையை ஒட்டியுள்ள ஹார்பின் பகுதியில் தொடங்கிய இந்தத் திருவிழாவில் பல்வேறு நாடுகளின் முக்கிய கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மின்னும் விளக்கொளிகளால் பனிச்சிற்பங்கள் பொன்னென மின்னி வருகின்றன.
தற்போது சுமார் 6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடந்து வரும் இந்தச் சிற்பத் திருவிழாவிற்காக சோங்வா ஆற்றில் இருந்து 2 லட்சம் கன மீட்டர் பனிக்கட்டி எடுத்து வரப்பட்டது. இங்கு பார்வையாளர்களைக் கவருவதற்காக குளிர்கால நீச்சல், பனிச்சறுக்கு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிற்பத் திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments