சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களுக்கு இழப்பீடு - முதலமைச்சர் பழனிசாமி

0 940

சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி சூடான் நாட்டில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக அவர் தமது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

சூடானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் மோடியை தான் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இணங்க உயிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments