சீக்கிய இளைஞர் கொலைக்கு இந்தியா கடும் கண்டனம்

0 917

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் வசிக்கும் சீக்கிய சமூக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய குரு குருநானக் பிறந்த இடமான நான்கனா சாகீப்பில் இருக்கும் குருத்வாராவில் அண்மையில் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் நடைபெற்று சில தினங்களே ஆகும் நிலையில், பெஷாவரில் ரவீந்தர் சிங் என்ற 25 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தற்போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து அண்மையில் பாகிஸ்தான் திரும்பிய நிலையில் அவரை மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. அவரை கொலை செய்தது யார் எனத் தெரியவில்லை.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, சீக்கிய சமூக மக்களின் பாதுகாப்பு, நலனை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments