6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து நியூசி.,வீரர் சாதனை..!

0 1588

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி, சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்ற உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், கேண்டர்பரி அணிக்காக களமிறங்கிய லியோ கார்டர், 16ஆவது ஓவரில், நார்த்தென் நைட்ஸ் அணி வீரர் ஆண்டன் டெவிசிக் வீசிய பந்துகளை (Anton Devcich) எதிர்கொண்டார்.

அந்த ஓவர் முழுவதும் வெளுத்துவாங்கிய லியோ கார்டர் தொடர்ச்சியாக 6 பந்துகளையும் அநாயசமாக சிக்சருக்கு தூக்கினார். லியோ கார்டரின் அதிரடியால், அவரது அணியும் எளிதில் வெற்றிபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY