"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட ஸ்டாலின் வலியுறுத்தல்
நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் அ.தி.மு.க. அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதாடவும், நடப்பு கல்வியாண்டிலேயே நீட் தேர்வு ரத்தாக நடவடிக்கை எடுக்குமாறும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப்பேரவையின் 2 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் மூன்று வருடங்களாக மத்திய அரசிடமிருந்து அ.தி.மு.க. அரசு விளக்கம் பெறவில்லை என்றும், மசோதாக்களை நிராகரித்ததை எதிர்த்து வழக்கும் தொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
Comments