பெருவுடையார் விமான கலசம் வேத மந்திரங்கள் முழங்க கீழே இறக்கப்பட்டது
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு பெருவுடையார் விமான கலசம் வேத மந்திரங்கள் முழங்க கீழே இறக்கப்பட்டது.
வரும் ஃபிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பெருவுடையார் சன்னதியின் மேலுள்ள கலசம் ஆகம விதிகளின்படி சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத பாலாலயம் செய்யப்பட்டு கீழே இறக்கப்பட்டது. அதன் தற்போதைய நிலை குறித்து கல்பாக்கம் இந்திராகாந்தி அணுமின் நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது. கலசத்தை சுத்தம் செய்தபின் மீண்டும் கோபுரத்தின் மீது பொருத்துவது வழக்கம்.
Comments