அனுமதியின்றி இயங்கிய சூதாட்ட கிளப்புகளில் திடீர் சோதனை - 21 பேர் கைது
திண்டுக்கல் அருகே சூதாட்ட கிளப்புகளில் திடீர் சோதனை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 21 பேரை கைது செய்தார்.
கொடைரோடு அம்மையநாயக்கனூர் பகுதிகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்தது. எனவே அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.
இதையடுத்து அம்மையநாயக்கனூர் பகுதியிலுள்ள சூதாட்ட கிளப்புகளில் நேரடியாக சோதனை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், 21 பேரை கைது செய்ததுடன் கிளப்புகளை மூடி சீல் வைத்தார். மேலும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 2 கார்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments