IMEI எண்கள் மூலம் திருடப்பட்ட செல்போன்களை மீட்ட போலீசார்
சென்னை தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் திருடப்பட்ட செல்போன்களை ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்கள் மூலம் மீட்ட போலீசார் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில், ஒவ்வொரு காவல் மாவட்டத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு திருடப்பட்ட செல்போன்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த வகையில், தியாகராயநகர் காவல் மாவட்ட தனிப்படை போலீசார், ஐ.எம்.இ.ஐ எண்களை வைத்து மீட்ட செல்போன்களும், திருட்டு செல்போன்களை தெரியாமல் வாங்கி பயன்படுத்தியவர்கள் ஒப்படைத்த மொபைல்களும், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 82 செல்போன்களை, தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அசோக்குமார், அதனதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.
Comments