வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த 2ஆவது நாளாக சிறப்பு முகாம்கள்

0 1313

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள், 2ஆவது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம் 23ம் தேதி முதல் இம்மாதம் 22ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2020 ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிரம்பியோரும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லோதாரும் இதில் தங்களது பெயர்களை சேர்க்கலாம்.

அலுவலகம் செல்வோர் வசதிக்காக விடுமுறை நாளான நேற்றும் இன்றும் வரும் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய 4 நாள்கள் 64 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. தொடர்ந்து 2ஆவது நாளாக இன்றும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments