தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம்

0 1143

தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னை தியாகராயநகரிலுள்ள, அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் கட்சியின் மேலிடப்பிரதிநிதிகளான சிவபிரகாஷ், நரசிம்மராவ் மற்றும் எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து 5 மாதங்களாக அந்த பதவி காலியாக உள்ளது.

இதனிடையே மாநில துணை தலைவராக பதவி வகித்து வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த குப்புராமு, மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments