தேர்தல் முடிவுகளில் அதிக வாக்குகள் பெற்றவர்களே வளர்பிறை - மு.க.ஸ்டாலின்
தேர்தல் முடிவுகளில் யார் அதிக வாக்குகள் பெற்றார்களோ அவர்கள் தான் வளர்பிறை என்றும் மற்றவர்கள் தேய்பிறை என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் கலைஞரின் சிலையை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச கணினி பயிற்சி மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 1967-ஆம் ஆண்டில் கலைஞர் சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றதாகவும் அப்போதுதான் அண்ணா முதலமைச்சராக பதவியேற்றதாகவும் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளதாகத் தெரிவித்த அவர் தேர்தல் முடிவுகளில் யார் அதிக வாக்குகள் பெற்றார்களோ அவர்கள் தான் வளர்பிறை என்று கூறினார்.
உள்ளாட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்கள்தான் மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், விரைவில் ஒரு நல்லாட்சியும் அமையும் எனத் தெரிவித்தார்.
Comments