மகாராஷ்டிர அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள்?
விரிவுபடுத்தப்பட்ட மகாராஷ்டிர அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய துறைகளாக கருதப்படும் உள்துறை மற்றும் நிதித்துறையை தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி பொதுநிர்வாகம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகளை முதலமைச்சர் உத்தவ்தாக்கரே தன்வசம் வைத்துள்ளார்.
நிதித்துறை, துணை முதலமைச்சர் அஜித் பவாரிடமும், உள்துறை மற்றொரு தேசியவாத காங்கிரஸ் தலைவரான அனில் தேஷ்முக்கிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதல் முறை எம்.எல்.ஏ ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் பாலாசாகேப் தோரட்டுக்கு வருவாய்த்துறையும், முன்னாள் முதல்வரான அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Comments