ஏர்இந்தியா விமானநிறுவனம் மூடப்படுவதாக வந்த தகவல் தவறு - அஸ்வினி லோஹானி

0 683

ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக வந்த தகவல் புரளி என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்று அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஸ்வினி லோஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர், ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை நிறுத்தப்போவதாகவும், அந்த நிறுவனம் மூடப்படப் போவதாகவும் வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஏர்இந்தியா நிறுவனத்தின் விமான சேவை தொடரும் என்றும் கடன் சுமை இருந்தாலும், அதனால் பயணிகளுக்கும், பிற நிறுவனங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ள அவர், விமானச் சேவை வழங்கி வரும் மிகப்பெரிய நிறுவனமாக இப்போதும் ஏர்இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments