பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

0 1114

கேரள நடிகையைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் தன்னை விடுவிக்குமாறு மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.  இதுதொடர்பாக நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு எர்ணாகுளம் கூடுதல் நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்தார். ஆனால் நடிகை தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், திலீப்பின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments