தர்பார் படத்திற்கு தேவா – அனிருத் இசை..! காப்பி சர்ச்சை முடிவு

0 2412

ஜினியின் தர்பார் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த அனிருத், தமிழ் இசை கலைஞர்களை பயன்படுத்தாமல் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனிருத் மீது பெப்சி அமைப்பில் புகார் அளிக்க உள்ளதாக தமிழ் இசைக்கலைஞர்கள் சங்கதலைவர் தினா தெரிவித்துள்ளார்.

அனிருத் மற்றும் தேவா இசையில் நடிகர் ரஜினியின் தர்பார் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் சும்மா கிழி கிழி என்று பட்டயை கிளப்பிக் கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனமும் தினம் ஒரு தர்பார் முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகின்றது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் இசைகலைஞர்கள் சங்க தலைவர் தினா, தர்பார் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ரஜினிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். தர்பார் படத்திற்கு 450 இசைக்கலைஞர்களை பயன்படுத்தியிருக்க வேண்டிய அனிருத் டெக்னாலஜி என்ற பெயரில் 4 தமிழ் இசைக்கலைஞர்களை மட்டுமே பயன்படுத்தி இருப்பதாகவும், இதனால் தங்கள் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

ரஜினிக்கு தெரிந்தே அனிருத் இப்படி செய்துள்ளார் என்று இந்த விவகாரத்தில் வம்படியாக ரஜினியையும் கோர்த்து விட்டார் தினா. வருங்காலத்தில் தமிழ் இசைக்கலைஞர்களை பயன்படுத்தாமல் புறக்கணிக்கும் இசையமைப்பாளர்களை கேட்டுக் கொள்ளும் விதமாக அனிருத்துக்கு எதிராக பெப்சியில் புகார் அளிக்க இருப்பதாகவும் தினா தெரிவித்தார்.

அனிருத் தமிழ் இசைக்கலைஞர்களை ஒரு போதும் புறக்கணிக்கவில்லை என்றும் தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகிறார் என்றும் அனிருத் தரப்பில் தெரிவித்துள்ள நிலையில் தர்பார் பட வெளியீட்டு நேரத்தில் இன ரீதியிலான வீண் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments