சுலைமானி உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

0 1911

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுலைமானி, கொல்லப்பட்டார்.

அவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி, திறந்த ஜீப்புகளில் பாக்தாத்தின் முக்கிய பகுதிகளில் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் ஈராக் பிரதமர் அடல் அப்துல் மஹ்தி ((Adel Abdul Mahdi)) உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments