"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு - வாகன போக்குவரத்து 4வது நாளாக முடக்கம்
காஷ்மீரில் ஏற்பட்ட மண் சரிவால் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து 4 வது நாளாக முடங்கி உள்ளது.
ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு வழியாக நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையே காஷ்மீரின் முக்கிய போக்குவரத்து வழித்தடம் ஆகும். இந்த சாலையில் உதம்பூர் அருகே பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணி நடைபெற்ற நிலையில் மண் சரிவு தொடர்வதால் ,சாலை மூடப்பட்டுள்ளது.இதனால் 2500 வாகனங்கள் அந்த சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
காய்கறிகள், பழங்களை ஏற்றி வந்த லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள உணவுப் பொருட்கள் வீணாகுவதாக ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மண் சரிவை அகற்றி சாலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments