இருசக்கரவாகனத்தில் சென்ற பெண்களை முந்த முயன்ற லாரி இடித்து விபத்து

0 1488

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பெண்களை முந்த முயன்ற டிரெய்லர் லாரி மோதிய விபத்தில், இருவரும் லாரி சக்கரங்களுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளனன.

ஆதாரம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் சிவமணி, கனகமணி ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தில் கருவலூர் சென்றுள்ளனர். அவினாசி அடுத்த நம்பியம்பாளையம் அருகே செல்லும்பொழுது, அவர்களை முந்திச் செல்ல முயன்ற இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி அவர்களது இருசக்கரவாகனத்தின் மீது இடித்தது.

அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்கள் இருவரும், லாரியின் பின்பக்க சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments