கோவிலையும் விட்டு வைக்காத காதலர்கள்..

0 1834

தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதலர்கள் சிலர், கோவில் பிரகாரங்களில் அமர்ந்து  காதல் சேட்டைகளில் ஈடுபடுவதாக பக்தர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இக்கோவிலுக்கு, நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலின் உள் சுற்று பிரகார தூண்கள் மறைவிடத்தில்  தஞ்சம் அடையும் ஜோடிகள் சிலர், மிக நெருக்கமாக அமர்ந்து காதல் சேட்டைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவதாக புகார் தெரிவிக்கும் பொதுமக்கள், இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments