தமிழகத்தில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும்..!
தமிழகத்தில் மழை நின்றதையடுத்து ஈரப்பதம் அதிகமாகி உள்ளதால் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் இருநாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ‘வடகிழக்கு பருவமழை வருகிற 8-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்றார். தமிழகத்தில் மழை நின்றதையடுத்து ஈரப்பதம் அதிகமாகி பனி பெய்ய தொடங்கி உள்ளதாக அவர் கூறினார்.
நேற்று தொடங்கிய பனிப்பொழிவு படிப்படியாக அதிகரித்து வரும் பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என்றும், காலை 9 மணி வரை கூட பனிப்பொழிவு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பது சகஜமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
Comments