சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் வருகிற 13 -ஆம் தேதி ஊர்வலம்

0 657

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வருகிற 13-ந் தேதி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 15- ஆம் தேதி நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வருகிற 13-ஆம் தேதி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும் ஊர்வலம் 15- ஆம் தேதி மதியம் பம்பை சென்றடையும். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும், மேலும் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பின் இரவு 7 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனு மதிக்கப்படுவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments