மழை நீர் சேகரிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி

0 960

மழை நீர் சேகரிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அலுவலர்கள் குடியிருப்பு நலச் சங்கங்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு குடியரசு தின விழாவில் நீர் பாதுகாவலர் என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

குறைந்த அளவே மழை பெய்த போதும் மாநகராட்சியின் நடவடிக்கைகளால் நிலத்தடி நீர் மட்டம் கடந்த காலங்களை விட வெகுவாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

பல்வேறு கட்டிடங்களில் புதிதாக 41,694 மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 330 சமுதாயக் கிணறுகளை தூர்வாரி அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து மழை நீர் இணைப்பு கொடுக்கப்பட்டதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments