அசாமில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

0 963

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்தியா-இலங்கை இடையே நாளை நடைபெறவுள்ள முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண  மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், செல்போன், பர்சுகள் ((purses)) தவிர்த்து பிற பொருள்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை இடையே மூன்று 20 கிரிக்கெட் போட்டிகளை கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இதில் முதல் போட்டி, கவுகாத்தியில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

அஸ்ஸாமில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றதை கவனத்தில் கொண்டு, போட்டியை காண வரும் ரசிகர்கள், செல்போன், பர்சுகள் தவிர்த்து பிற பொருள்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பவுண்டரி, சிக்சர்களை குறிக்கும் அட்டைகள், பதாகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments