வாக்கு முத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு

0 2148

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வாக்குமுத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள், சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

image

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் குன்னம் அருகே குறிப்பிட்ட சின்னத்தில் வாக்கு முத்திரை பதியப்பட்ட இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள் சாலையோரத்தில் கிடந்ததுள்ளன.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வாக்குச்சீட்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வாக்குச்சீட்டுகள் மேலமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் சின்னங்கள் அடங்கியவை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments