வடமாநிலத்தவரின் கடைகளுக்கு இரவோடு இரவாக பூட்டு..

0 2203

தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் வடமாநிலத்தவரின் கடைகளுக்கு இரவோடு இரவாக மேல் பூட்டுப் போடப்பட்டுள்ளதுடன் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தும் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

image

தஞ்சையில் கிரானைட், இனிப்புகள், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட கடைகளை நடத்தி வரும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு கடைகளை பூட்டிச் சென்ற நிலையில் இன்று காலை கடைக் கதவுகளில் கூடுதல் பூட்டுகள் பூட்டப்பட்டிருந்ததுடன் தமிழ் தேசியக் கட்சி பெயரில் வட மாநிலத்தவருக்கு எதிரான எச்சரிக்கைச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் இன்று வடமாநிலத்தவர்கள கடைகளை திறக்கவில்லை.

image

இதேபோன்று புதுக்கோட்டையில் வடமாநிலத்தவர்களின் எலக்ட்ரிக்கல் கடை, பர்னிச்சர் கடை, பாத்திரக்கடை உள்ளிட்டவற்றில் இரவோடு இரவாக மேல் பூட்டு போடப்பட்டுள்ளதோடு வடமாநிலத்தவருக்கு எதிரான வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments