மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண சிறப்பு ஏற்பாடு

0 829

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இதனை காண 16ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்படும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து மறுநாள் காலை 5.30 மணியளவில் மதுரையை சென்றடையும். காலை உணவுக்கு பின்னர் அலங்காநல்லூர் அழைத்து செல்லப்படும் பயணிகள் ஜல்லிக்கட்டை பார்த்த பின்னர், அன்றிரவு அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் 18ம் தேதி மதுரையிலுள்ள சுற்றுலாத்தளங்களை பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கென தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments