லஷ்கரே தொய்பா அமைப்பு பயங்கரவாதி கைது

0 949

ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸாரால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த லஷ்கரே தொய்பா பயங்கரவாதி கைது செய்யப்பட்டு,  ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கல்லன் கந்தர்பாலில் ( Kullan Ganderbal) உள்ள மருத்துவமனையில் பயங்கரவாதி நிசார் தர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவமனையை பாதுகாப்புப் படையினரும், ஸ்ரீநகர் போலீஸாரும் சுற்றிவளைத்து, அங்கிருந்த பயங்கரவாதி நிசார் தர்ரை கைது செய்தனர். 

கடந்த நவம்பர் மாதம் இதே பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது பாதுகாப்புப் படையினரிடம் இருந்து அவன் தப்பிச் சென்றான். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். ஸ்ரீநகரில் செயல்படும் பிற பயங்கரவாதிகள் குறித்து அவனிடம் தற்போது பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments