2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் இம்மாதம் அறிவிக்கப்படுவர்: சீமான்

0 1955

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் இந்த மாதம் அறிவிக்கப்படுவர் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வேலப்பன் சாவடியில் நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக் குழு கூட்டத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், லோக்சபா தேர்தலில் பெற்ற 4% என்ற வாக்கு விகிதம், தற்போது நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10 சதவீத வாக்குகளாக அதிகரித்துள்ளது. எனவே இத்தேர்தலில் தங்களுக்கு பின்னடைவு இல்லையென்றும் கூறினார்.

மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் சரிசமமாக களமிறக்கப்படுவார்கள். 234 தொகுதிகளில் தலா 117 ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு நாம் தமிழர் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments