பிறந்தநாள் அன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் Greta Thunberg..
பருவநிலையை காப்பதற்காக போராடி வரும் கிரெட்டா துன்பெர்க், தனது 17வது பிறந்தநாளை கொண்டாடாமல் சுவீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பூமியைக் காக்க வலியுறுத்தி, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் சுவீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் கிரெட்டா துன்பெர்க் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனது 17வது வயதை நேற்று எட்டிய அவர், கேக் வெட்டி கொண்டாடாமல் வழக்கம் போல் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனது வெள்ளிக்கிழமை போராட்டத்தை தொடர்ந்தார்.
Comments