70 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்க காரணம் இதுதான்.. ரகசியத்தை சொன்ன நடிகர் ரஜினி

0 1632

70 வயதிலும் தான் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தர்பார் படம் வரும் 9-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைக்கு வரும் நிலையில் தெலுங்கு தர்பார் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சி நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 70 வயதிலும் எப்படி உங்களால் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது? என எல்லோரும் தன்னிடம் கேட்பதாகக் கூறினார்.

கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், இந்த விழாவுக்கு வந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் எனது முதல் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். தற்போது வரை 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.

தமிழக ரசிகர்கள் என் மீது எந்த அளவுக்கு அன்பாக உள்ளார்களா, அதே அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் அன்பு காட்டுவது எனது பாக்கியம். தெலுங்கு மக்கள் சினிமா பிரியர்கள். என்னை ஆதரிக்கிறீர்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments