ம.பி-யில் பரிதாபம்.. பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி 2 பேர் பலி

0 736

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில், சிமெஸ் அகாடமி என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு இருக்கைகளை மட்டுமே கொண்ட பயிற்சி விமானம் ஒன்று தரை இறங்க முயற்சித்துள்ளது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த பயிற்சியாளர் அசோக் மக்வானா மற்றும் விமான பயிற்சியில் ஈடுபட்ட பியூஷ் சந்தேல் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

அடர்த்தியான மூடுபனி காரணமாக விமானிகள் ஓடுபாதையை தீர்மானிக்க முடியாததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய விமானம் Cessna 172 என்ற பெயரிடப்பட்டது. இந்த விமானம் ஒரு கண்ணாடி காக்பிட் மற்றும் இரவில் பறக்க வசதிகளை கொண்டது என சிமெஸ் அகாடமி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments