மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் நகை திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110 சவரன் தங்க நகைகள் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி காலனியைச் சேர்ந்த மருத்துவர் சொக்க லிங்கம், சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் கடந்த 29 ஆம் தேதி சென்னையில் உள்ள தன் மகள் வீட்டுக்கு சென்றிருந்த மருத்துவர் சொக்கலிங்கம், நேற்று கோவில்பட்டி திரும்பியுள்ளார்.
அப்போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 110 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது. இதையடுத்து சொக்கலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments