விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை ஏற்பு

0 955

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் உள்ள 7 பழுதான மதகுகளை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது.

60ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணையில் கடந்த 2017-ல்  பிரதான முதல் மதகு உடைந்தது. மற்ற 7 மதகுகளும் இதே போன்று சேதமாகி இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி அன்று முதல் 42 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 7 மதகுகளையும் மாற்றி அமைப்பதற்காக  19 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தற்போது புதிய மதகு தயாரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் நேற்று அணையின் பழைய 7 மதகுகளையும் வெட்டி அகற்றும் பணிகள் தொடங்கியது. இதன்பின்னர் பிப்ரவரி மாதத்தில் புதிய மதகு பொருத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments