நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31ந் தேதி தொடக்கம்?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடரை எப்போது நடத்தலாம் என்பதை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைக்கும். அதன் பின்னர் மத்திய அரசு முறைப்படி நாடாளுமன்றம் கூடும் தேதியை அறிவிக்கும்.
பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கும். பொருளாதார ஆய்வறிக்கையும் அதே நாளில் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Comments