17 வயது பையன் 21 வயது பெண்ணை மணந்தால் தண்டனையா? -உச்சநீதிமன்றம் விளக்கம்
21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவரை தண்டிக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அது குழந்தைத் திருமணமாக கருதப்படக்கூடாது என்றும் நீதிபதி மோகன் சந்தான கவுடர் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. 17 வயது சிறுவன் ஒருவன் 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்கு எதிரான வழக்கில் சட்டப்பிரிவுகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், தன்னைவிட வயதில் பெரிய பெண்ணை மணப்பதற்காக ஆண்மகனையும், சிறுவனை மணப்பதால் அந்த பெண்ணையும் தண்டிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
Comments