இரு தரப்பினரிடையே மோதல் - வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

0 1648

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுப்பதற்காக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் பரளச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்தில் இருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு ஊர் திரும்பினர்.

அவர்கள் சென்ற வாகனம் எம்.ரெட்டியபட்டி அருகே வந்த போது மற்றொரு பிரிவினர் அந்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இருதரப்பினரும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மோதி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் அவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் அங்கு காவல்துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments