நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

0 1448

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. நெல்லையில் நடந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நெல்லை கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 13 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கடற்கரை செல்வம் போலீசாரின் விசாரணை நிறைவடையாததால் ஜாமீன் வழங்க மறுத்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments