வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1109

வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதப்படுத்தப்படுவதாக தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் விதிகளுக்கு உட்பட்டுத்தான் தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது .மாநில தேர்தல் ஆணையத்தின் விளக்கத்திற்கு சாட்சியாக வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கண்காணிப்பு நடைமுறைகள் முடியாததால் சி.சி.டி.வி. பதிவுகளை தற்போது தாக்கல் செய்ய முடியாது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என்று கூறிய நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments