ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிமுக, திமுக கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்..!

0 1568

ராட்சி ஒன்றிய தேர்தலில் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. டெல்டா மாவட்டங்களில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. 

கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 ஒன்றியங்களில் அதிமுக 9 ஒன்றியங்களை கைப்பற்றி அசைக்க முடியாத பலத்துடன் உள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற முடிந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 ஒன்றியங்களில் அதிமுக, திமுக தலா 6 ஒன்றியங்களை கைப்பற்றி இருக்கின்றன.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 8 ஒன்றியங்களிலும், திமுக 5 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 ஒன்றியங்களில் அதிமுக 10 ஒன்றியங்களை கைப்பற்றி இருக்கிறது. 3 ஒன்றியங்கள் திமுக வசமானது.

சேலம் மாவட்டத்தில் அதிமுக அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்து இருக்கிறது. மொத்தம் உள்ள 20 ஒன்றியங்களில் அதிமுக 16 ஒன்றியங்களை கைப்பற்றியது. அயோத்தியாப்பட்டினம் ஒன்றியத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற முடிந்தது.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஒன்றியங்களையும் அதிமுக தன்வசப்படுத்தி இருக்கிறது.

நீலகிரியில் மொத்தம் உள்ள 4 ஒன்றியங்களையும் திமுக தன்வசமாக்கி இருக்கிறது.

மதுரையில் உள்ள 13 ஒன்றியங்களில் அதிமுக 6 ஒன்றியங்களிலும், திமுக - 6 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஒன்றியங்களில் அதிமுக 4 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

விருதுநகரில் மொத்தம் உள்ள 11 ஒன்றியங்களில் திமுக 8 ஒன்றியங்களை தன்வசமாக்கி இருக்கிறது. அதிமுகவுக்கு 2 ஒன்றியங்களே கிடைத்தன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 4 ஒன்றியங்களிலும் திமுக 10 ஒன்றியங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 ஒன்றியங்களில் அதிமுக 5 ஒன்றியங்களை கைப்பற்றியது. திமுக ஒரு ஒன்றியத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரியில் மொத்தம் உள்ள 10 ஒன்றியங்களில் திமுகவிற்கு 7 இடத்திலும் அதிமுகவுக்கு 3 இடத்திலும் வெற்றி கிடைத்துள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்கள் திமுக 12 ஒன்றியங்களை கைப்பற்றி இருக்கிறது. 2 ஒன்றியங்களில் அதிமுக வெற்றி பெற்றது.

திருவாரூரில் உள்ள 10 ஒன்றியங்களில் அதிமுக 4 இடங்களையும் திமுக 5 இடங்களையும் கைப்பற்றின.

நாகையில் மொத்தம் உள்ள 11 ஒன்றியங்களில் திமுக 9லும், அதிமுக 2லும் வெற்றி பெற்றுள்ளன.

திருவண்ணாமலையில் மொத்தம் உள்ள 18 ஒன்றியங்களில் அதிமுக - 8 இடங்களிலும், திமுக - 8 இடங்களிலும் வெற்றி பெற்று சமபலத்துடன் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக - 5 ஒன்றியங்களிலும், திமுக - 7 ஒன்றியங்களிலும் வென்றுள்ளன.

பெரம்பலூரில் உள்ள 4 ஒன்றியங்களில் திமுக 3 ஒன்றியங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் அதிமுக 12 ஒன்றியங்களிலும், திமுக - 2 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றி இருக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் அதிமுக - 4 ஒன்றியங்களிலும் திமுக - 2 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 ஒன்றியங்களில் திமுக 11 இடங்களிலும் அதிமுக - 2 இடங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.

சிவகங்கையில் உள்ள 12 ஒன்றியங்களில் அதிமுக - 5 ஒன்றியங்களையும், திமுக - 4 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் அதிமுக - 6 இடத்திலும், திமுக - 5 இடத்திலும் வென்றுள்ளன.

கன்னியாகுமரியில் மொத்தம் உள்ள 9 ஒன்றியங்களில் அதிமுக - 2 ஒன்றியங்களையும், திமுக - 4 ஒன்றியங்களையும் கைப்பற்றி இருக்கின்றன.

இராமநாதபுரத்தில் இருக்கும் 11 ஒன்றியங்களில் அதிமுக - 3 ஒன்றியங்களிலும்,திமுக - 7 ஒன்றியங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments