லாட்டரியில் 1 கோடி ரூபாய் பம்பர் பரிசு.. காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு முதியவர் மனு

0 1390

மேற்குவங்க மாநிலத்தில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற முதியவர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையம் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

கிழக்கு புர்த்வான் மாவட்டத்தின் கல்னா பகுதியை சேர்ந்த 70 வயதான இந்திர நாராயண் சென் என்பவர், நாகாலாந்து மாநில லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். 60 ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் வாங்கிய அவருக்கு, ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது.

லாட்டரி விற்ற கடைக்காரர் வந்து ஆதாரத்துடன் தெரிவித்த பின்னர் தான் அவர் அதனை நம்பினார். இந்த நிலையில் ஒரே இரவில் கோடீஸ்வரனாகி விட்டதால், வீட்டை விட்டு வெளியே வரவே தனக்கு பயமாக இருக்கிறது என்று கூறி, காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.

லாட்டரியில் தனக்கு கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை துர்கா கோயில் கட்டுவதற்கும், பூஜைக்கும் செலவிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments