ஜோதிமணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. திடீர் போராட்டம்

0 1472

காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி ஜோதிமணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் கரூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மறைத்து அந்த 2 வார்டுகளில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால் தேர்தல் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.
இதை கண்டித்து, ஜோதி மணி எம்.பி.யும், வி.செந்தில் பாலாஜியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் முன்பு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments