குயின் இணையதள தொடருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

0 1298

குயின் இணையதள தொடருக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட குயின் தொடருக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகளை கருதி தடை விதிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது பற்ற கடந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. அப்போது விவரங்களை ஆராய்ந்து முடிவெடுக்க 4 வார அவகாசம் தேவை என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட்டதாகவும், இந்த வழக்கில் அப்படியல்ல என்றும் குயின் தொடர் இயக்குநர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து இன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments