இந்திய பயணத்தை ரத்து செய்த ஆஸ்திரேலிய பிரதமர்

0 1009

ஆஸ்திரேலிய புதர்த் தீ எதிரொலியாக தமது இந்தியப் பயணத்தை ரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார். 

ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் புதர்த் தீ பற்றியெரிந்து வரும் சூழலில் ஸ்காட் மாரிசன் நாட்டை விட்டுச் செல்வது பொருத்தமானதாக இருக்குமா என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இம்மாதம் 13 ஆம் தேதி இந்தியா வரும் திட்டத்தை அவர் ரத்து செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில்  புதர்த்தீ பிரச்சனை நிலவும் போது, பிரதமர்  ஸ்காட் மாரிசன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments