2019 ல் இருசக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சி

0 820

கார் விற்பனையில் ஏற்பட்ட சரிவைப் போலவே, கடந்த ஆண்டு இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையும் வீழ்ச்சி அடைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் மாதம் தங்களது உள்நாட்டு விற்பனை பலமடங்கு குறைந்து விட்டது என முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டி.வி.எஸ். மோட்டார் ஆகியன தெரிவித்துள்ளன.

2018 ஆம் ஆண்டு 4 லட்சத்து 36 ஆயிரத்து 591 பைக்குளை விற்ற ஹீரோ மோட்டோகார்ப், கடந்த ஆண்டு 4 லட்சத்து 12 ஆயிரம் பைக்குக்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

பஜாஜ் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 21 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், டி.வி.எஸ். நிறுவனம் 25 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதே சமயம் தங்களது விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments