நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர சட்ட நடவடிக்கை - வெளியுறவு அமைச்சகம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமது உறவினர் மெகுல் சோக்சியுடன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
நீரவ் மோடி தொடர்பான இரண்டு வழக்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , நீரவ் மோடியின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் அவருடைய காவலை இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், நீரவ் மோடி தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Comments