வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு - போலீசார் தடியடி

0 4050

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குப்பெட்டி அறை தாமதமாக திறக்கப்பட்டது.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களை அனுமதிப்பதில் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசாருடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இதனிடையே காலை உணவு வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்து சுமார் 200 அலுவலர்கள் வெளிநடப்புச் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments