குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க ஊர்திக்கு அனுமதி இல்லை - மத்திய அரசு

0 1311

டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அணி வகுப்பில் பங்கேற்க மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

மத்திய அமைச்சகங்களும் 24 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கோரின. ஆனால் மாநிலங்கள் சார்பில் 16 ஊர்திகளுக்கும், அமைச்சங்கள் சார்பில் 6 ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அந்த ஊர்தியில் இடம் பெற இருந்த காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments