இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம்
இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 62 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 21 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளம் வடிந்த நிலையில், வீடுகளுக்கு திரும்பி உள்ள மக்கள், சேறும், சகதியுமாக கிடக்கும் வீடுகள் கண்டு உள்ளம் நொந்துபோயினர்.
மொத்த வீட்டையும், வெள்ளம் பாழ் படுத்திய நிலையில், சரி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகும் என்பது அங்குள்ள மக்களின் கவலையாக உள்ளது.
Comments